சென்னைக்கு அதிர்ச்சி தோல்வி; 10 ரன்களில் வெற்றிப்பெற்ற ஹைதராபாத் அணி..!
Seithipunal Tamil April 19, 2026 07:48 AM

19 வது ஐபி.எல் தொடரின் 27 வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை - ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் அணி சார்பில் அபிஷேக் சர்மா ரன்கள், கிளாசன் 59 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். சென்னை அணி சார்பில் கம்போஜ் மற்றும் ஓவர்டன் தலா 03 விக்கெட்டினையும், முகேஷ் சௌத்ரி 02 விக்கெட்டினையும், குர்ஜப்னீத் சிங் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 08 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.

சென்னை அணி பவர் பிளேயில் அதிரடியாக ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 07 ரன்களில் ஆட்டமிழந்தார். ருத்துராஜ் 19, ஆயுஷ் மாத்ரே 30, மாத்யூ ஷார்ட் 34, சப்ராஸ்கான் 25, என ஆட்டமிழந்தனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிறேவிஸ் 0 ற்கு ஆட்டமிழந்தார். அடுத்து சிவம் தூபே 21, ஓவர்டன்  16 என ஆட்டமிழந்தனர். இறுதியில் கம்போஜ் 13, நூர் 01 என களத்தில் இருந்த நிலையில், ஹைதராபாத் அணி 10 ரன்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 04 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

ஹைதராபாத் அணியில் நிதீஷ்குமார் ரெட்டி 02, எஷான் மலிங்கா 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.