விஜய் குறித்துத் தான் பேசியதற்காகச் சமூக வலைதளங்களில் எழப்போகும் விமர்சனங்களுக்கு நடிகர் சத்யராஜ் பெரம்பூர் மேடையில் மிகத் துணிச்சலாகப் பதிலடி கொடுத்தார். தான் பேசியதற்காக விஜய்யின் ஆதரவாளர்கள் சென்னை, மதுரை, கோவை என அனைத்து ஊர் கெட்ட வார்த்தைகளிலும், ஏன் வட இந்தியக் கெட்ட வார்த்தைகளில் கூடத் தன்னைத் திட்டுவார்கள் என்பது தமக்குத் தெரியும் என அவர் வெளிப்படையாகக் கூறினார். விஜய்யின் பின்னணியில் இருக்கும் நபர்கள் வட இந்தியாவில் செட்டில் ஆகியிருப்பதால்தான் அங்கிருந்து கூட விமர்சனங்கள் வரும் என அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட எந்தவொரு விமர்சனத்தைப் பற்றியும் தனக்குக் கவலையில்லை என்று முழங்கிய சத்யராஜ், “நாம் எல்லாம் தந்தை பெரியாரின் ஆளுங்கடா!” என ஆவேசமாகத் தெரிவித்தார். எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ மாட்டோம் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் பக்கம் நின்று உண்மையை உரக்கச் சொல்வதைத் யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.