வெப்பம் உயரும்.. மழையும் வரும்! – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!
Top Tamil News April 19, 2026 10:48 AM

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை முதல் 22-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

23, 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 22-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஒருசில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். \

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.