பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி- வெளியான ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு
Top Tamil News April 19, 2026 01:48 PM

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஜூனியர் விகடனின் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


அதன்படி, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37.5% வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 83 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 33.63%  வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் 3 இடங்களில் வெற்றி பெற்று 24.71 சதவீத வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.  ஜூனியர் விகடன் கணக்கெடுப்பின்படி, 27 இடங்களில் கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பெரும்பான்மை இடங்களைப் பெறாது, மேலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைக்கும். அதிமுகவும் பெரும்பான்மை பெறவில்லை. பெரம்பூர், திருச்சி கிழக்கு மற்றும் ஆர்.கே. நகரில் TVK வெற்றி பெறுகிறது. வில்லிவாக்கத்தில் கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.