பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, ‘சினிமா சங்கி’ மற்றும் ‘கூத்தாடிகள்’ என விமர்சிப்பவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான ஆவேசப் பேட்டியை அளித்துள்ளார். “சினிமாவில் இருப்பவர்களை இளக்காரமாகப் பேசும் பி.டி.ஆருக்கு, தேர்தல் நேரத்தில் மட்டும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கலைஞர்கள் பிரசாரத்திற்குத் தேவைப்படுவது ஏன்?” என்று அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் பப்ளிசிட்டிக்கு நாங்கள் வேண்டும், ஆனால் எங்களை மதிக்க மாட்டீர்கள் என்றால் இது என்ன நியாயம்? இதே கேள்வியைத் தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலினிடமோ அல்லது உதயநிதியிடமோ பிரகாஷ் ராஜ் கேட்பாரா?” என்று சவால் விடுத்தார். மேலும், “பி.டி.ஆர் தனது பேச்சின் மூலம் தனது படிப்பைக் காட்டுகிறார்; நானும் என் கணவரும் எங்கள் வளர்ப்பைக் காட்டுகிறோம்” என்று கூறி தனது பேட்டியை அதிரடியாக நிறைவு செய்தார் குஷ்பூ. இந்த அனல் பறக்கும் பேட்டி தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.