திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீச்சு
Top Tamil News April 20, 2026 01:48 AM

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். வேனில் இருந்து அவர் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரை நோக்கி காலி மது பாட்டிலை மர்ம நபர் ஒருவர் வீசி உள்ளார். அந்த பாட்டில் வேனில் பட்டு உடைந்து சிதறியது. இதில் நல் வாய்ப்பாக திண்டுக்கல் லியோனிக்கோ வேறு யாருக்குமோ காயம் ஏற்படவில்லை. மது பாட்டிலை வீசிய நபர் யார் என்பது குறித்தும் என்ன காரணத்திற்காக வீசினார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியில் தான் விஜய் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.