சென்னை, ஏப்ரல் 19 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு வந்துள்ள மத்திய உள்துறை அமித் ஷா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மயிலாப்பூர் மாட வீதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக்கிற்கு வாக்கு சேகரித்தார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மாண்ட ரோட் ஷோ சென்றார். மயிலாப்பூபரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் திறந்த வெளி வாகனத்தில் ரோட் ஷோ சென்றார். அவர் வருகையை முன்னிட்டு மயிலாப்பூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிக்க : திருச்சியில் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய விஜய்… அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை!
மயிலாப்பூரில் அமித் ஷா ரோட் ஷோ சென்ற வீடியோMylapore turned saffron today. Watch roadshow at South Chennai.
மயிலாப்பூர் இன்று காவி மயமாக மாறியது. தென் சென்னையில் நடைபெறும் சாலை பேரணியை காணுங்கள்.#NDAWithTamilnadu https://t.co/yJpslMiTjM
— Amit Shah (@AmitShah)
மயிலாப்பூர் மாட வீதிகள் வழியாக நடைபெற்ற ரோட் ஷோவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அமித் ஷாவிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த நிலையில் பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து மயிலாப்பூரை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் திமுகவின் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க தயாராகி விட்டனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை வெற்றி என்பது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என்றார்.
முன்னதாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சு தொகுதியில் பாஜக வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து அந்த பகுதியில் அமித் ஷா பிரம்மாண்ட ரோட் ஷோ நடத்தினார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் கருணாநிதி அவருக்கு பிறகு ஸ்டாலின், இப்போது உதயநிதி ஸ்டாலின் என ஒரு சங்கிலித் தொடராக நீடிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் நலனை விட அவரது குடும்பத்தின் நலனே முக்கியம் என்றார்.
இதையும் படிக்க : மு.க. ஸ்டாலினுக்கு நேரடி சவால் விடுத்த பியூஷ் கோயல்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. என்ன காரணம்!
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முறியடித்தது இந்த இண்டியா கூட்டணிதான். அதுமட்டுமின்றி, திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த ஊழல்கள் அனைத்தும் வேரறுக்கப்படும்” என்று அவர் உறுதி அளித்தார்.