“நம்ப வச்சு முதுகில் குத்திட்டாங்க” – உங்களை முதல்வராக்கினது தப்பா….? பழனிச்சாமிக்கு எதிராக எடப்பாடியில் சசிகலா போட்ட போடு….!!
SeithiSolai Tamil April 19, 2026 11:48 PM

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ எதிர்த்துப் போட்டியிடும் தனது அஇபுதமமுக வேட்பாளர் சுரேஷை ஆதரித்து சசிகலா நேற்று (ஏப். 18) பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ”ஒரு இக்கட்டான சூழலில், இந்த கொங்கு மண்டலத்திற்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என முடிவு செய்து, அதனைச் செயல்படுத்திக் காட்டினேன். ஆனால், நான் யாரை நம்பினேனோ அவர்களே எனது முதுகில் குத்திவிட்டார்கள்.

அவர்களுக்கு நான் அப்படி என்ன கெடுதல் செய்துவிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. உங்களை முதல்வராக்கியதுதான் நான் செய்த குற்றமா?” என உருக்கமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், துரோகம் செய்தவர்களைச் சட்டமன்றத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் பேசியது எடப்பாடி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.