காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போ அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது;
தேர்தல் களத்திற்கு புதிதாக நடிகர் ஒருவர் வந்துள்ளார். சோசியல் மீடியாவை மட்டும் நம்பி, எந்த டீடைல்சும் பேசாமல் ஒரு அரசியலை பின்பற்றுகிறார். அவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. இது நிலைத்து நிற்குமா? என்று விஜய்யை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது அவரது ரசிகர்கள் அடுத்த தேர்தல் வரை நிலைத்து நிற்பார்களா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும், ஆனால் ரசிகர்கள் கூட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த தாக்கம் வாக்குகளாக மாறி, வெற்றியை தருமா என்பது என்னை பொறுத்தவரை கேள்விக்குறி என்றும், மக்கள் சித்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தன்னுடைய வாக்கு பயனுள்ளதா, இல்லை வீணாக பிக்கும் வாக்கா என்று சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜ வந்து விடக்கூடாது எனவும், சினிமா மோகத்தில் போடப்படும் ஓட்டு மறைமுகமாக மற்றவர்களுக்கு சாதகமாக மாறும். இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.