நீங்க போடுறது மொக்க வீடியோ.. ரொம்ப கண்றாவியா இருக்கு! – இர்ஃபானை முகத்துக்கு நேராக கலாய்த்த சிம்பு
CineReporters Tamil April 20, 2026 04:48 PM

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு , பிரபல யூடியூபர் இர்ஃபானை நேர்காணல் ஒன்றில் பங்கமாக கலாய்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஒரு காலத்தில் உணவு சார்ந்த ரிவியூக்கள் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர் இர்ஃபான். சினிமா பிரபலங்கள் முதல் அர்சியல் பிரபலங்கள் வரை அனைவரையும் பேட்டி எடுத்து தனது சேனலில் பதிவிடுபவர் இவர். ஆதே வேலை பல சர்ச்சைகளில் சிக்கியவரும் இவரே. கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு முறி அவரது மனைவியுடன் ஏழை மக்களுக்கு உதவ சென்ற இடத்தில் இவர்கள் நடந்து கொண்ட விதம் அனைவராலும் கழுவி ஊற்றப்பட்டது. பலர் இவரது சேனலை பர்ப்பதையே தவிர்த்தனர். அந்த சம்பவத்திற்கு பின் இவரது சேனல் பார்வையாலர்கள் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

இந்த சமீபத்தில் சிம்புவை பேட்டி காணும் வாய்ப்பு இர்ஃபானுக்கு கிடைத்துள்ளது. அப்போது சிம்புவிடம் தனது வழக்கமான டாஸ்க்குகளை இர்ஃபான் கொடுக்க முயன்றபோது, சிம்பு அதனை வெளிப்படையாகவே மறுத்துள்ளார். அந்த வீடியோவில் சிம்பு கூறுகையில், நீங்க செய்யுற மொக்க வீடியோஸ்லாம் நான் பண்ண முடியாது. அதாவது ஒருத்தரை உட்கார வச்சி, எழுத வச்சி, சிரிக்க வைக்குறது, படிக்கச் சொல்றது எல்லாம் பார்க்க ரொம்ப கண்றாவியா இருக்கு.. தப்பா எடுத்துக்காதீங்க என்று முகத்துக்கு நேராகவே இர்ஃபானை விமர்சித்துள்ளார். இந்த வீடியோ க்ளிப் தற்போது X உள்ளிட்ட தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.