ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் பிறந்தநாளை முன்னிட்டு, அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில், முகே ஷ அம்பானியின் மனைவி நீடா அம்பானி, சிவப்பு நிற புடவையில் தேவதை போல காட்சியளித்தார். கைத்தறியில் நெய்யப்பட்ட மலர் வேலைப்பாடுகள் கொண்ட அந்த புடவைக்கு இணையாக அவர் அணிந்திருந்த நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
பொதுவாக வைரம் மற்றும் மரகத நகைகளை விரும்பும் நீடா அம்பானி, இந்த முறை பாரம்பரிய டெம்பிள் ஜுவல்லரி எனப்படும் கோயில் நகைகளை தேர்ந்தெடுத்திருந்தார். அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியில் சிவபெருமான் உருவம் செதுக்கப்பட்ட பதக்கங்கள் இருந்தன. அவரது காதணிகளில் கிருஷ்ணரின் வடிவம் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்திய கைவினைப் பொருட்களையும், நெசவாளர்களையும் ஊக்குவிப்பதில் நீடா அம்பானி எப்போதும் முன்னணியில் இருப்பவர். 'சுதேஷ்' என்ற அமைப்பின் மூலம் பாரம்பரிய கலைகளை அவர் உலகிற்கு எடுத்து செல்கிறார். இதற்கு முன்னரும் காயத்ரி மந்திரம் மற்றும் ராம நாம கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட புடவைகளை அணிந்து தனது ஆன்மீகப் பற்றையும், கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva