“பாஜக அரசை பழி வாங்க வேண்டிய நேரம் இது! தீர்த்து கட்ட வேண்டிய நேரம்” - உதயநிதி ஸ்டாலின்
Top Tamil News April 20, 2026 07:48 PM

திருவொற்றியூர் என்றென்றும் திமுகவின் கோட்டை சென்னை மாநகரமே திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல் சுந்தர்ராஜ் ஆதரவாக சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திருவொற்றியூர் வள்ளலார் நெடுஞ்சாலை தேரடி சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல் சுந்தரராஜை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது பேசிய உதயநிதி ஸ்டாலின், “என்றைக்குமே திருவொற்றியூர் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த சட்டமன்ற தேர்தல் டெல்லி அணி vs தமிழ்நாடுஅணி. ஜெயிக்க போறது டெல்லி அணியா? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாடு அணி ஜெயித்து காட்ட வேண்டும். ஐந்து வருடத்தில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தி இருப்பதை வரிசைப்படுத்தி இருக்கின்றோம் என்ன செய்யப் போகிறேன் என்பதையும் சொல்லி இருக்கின்றோம். கடந்த ஐந்து வருடத்தில் பாஜக அரசு எந்த விதத்திலாவது உதவி செய்திருக்கிறார்களா? தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்கள் கொடுத்தார்களா? நாம கேட்கிற நிதியை கொடுக்கிறார்களா? எந்த உதவியும் செய்வது இல்லை. தேர்தல் அறிவித்தவுடன் மோடியும், அமித்ஷாவும் மாறி மாறி தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் கொடுத்தது கிடையாது 

கடந்த ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் கிடையாது. தமிழ்நாடு என்ற பெயரை பட்ஜெட்டில் கிடையாது தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்க கூடிய மோடி அரசை, ஒன்றிய பாஜக அரசை பழி வாங்க வேண்டிய நேரம், தீர்த்து கட்ட வேண்டிய நேரம். அவர்களுக்கு சரியான விடை கொடுக்க வேண்டிய நேரம் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தல். மிக மிக வெற்றியாக இருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்யுங்கள். ஐந்து வருடம் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரிங்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்து தருவோம் என்று கூறுங்கள். சங்கி  கூட்டத்தை தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது. அடிமை கூட்டத்தை குறிப்பாக சென்னையில் தலையெடுக்க விடக்கூடாது. திருவொற்றியூர் என்றென்றும் திமுகவின் கோட்டை. சென்னை மாநகரமே திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்றால் அடுத்த இரண்டு நாட்களில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். சென்ற முறை கேபி சங்கர் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுந்தர்ராஜன் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை கண்டிப்பாக திருவொற்றியூருக்கு பெற்று தருவார்” எனக் கூறினார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.