தமிழக தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு
Top Tamil News April 20, 2026 07:48 PM

புதுச்சேரி எல்லையோர மதுகடைகளில் கலால்துறை - போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி செல்கிறார்களா? என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வழக்கமாக பல ஆண்டாக தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். இதனால் 2 மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு முன்னும், பின்னும் மதுக்கடைகள் அடைக்கப்படும். இந்த முறை புதுவை சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்து முடிந்தது. இதனால் புதுவையிலிருந்து தமிழகத்துக்கு மது கடத்தப்படலாம் என்பதால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் 23ந் தேதி வரை 3 நாட்கள் புதுவை, காரைக்காலில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. 

இந்த நிலையில் இன்றைய தினம் புதுவை, காரைக்காலில் எல்லையோர மதுக்கடைகளில் புதுவை போலீசார், கலால் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி செல்கிறார்களா? என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சீனியர் எஸ்பி கலைவாணன், கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ்  ஆகியோர் உத்தரவின்பேரில் கலால் துறையினரும், போலீசாரும் இந்த கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.