விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்…. கோர்ட்டில் நேருக்கு நேர் சந்திக்கும் விஜய் – சங்கீதா….? ஜூன் 15க்கு ஒத்திவைப்பு….!!
SeithiSolai Tamil April 20, 2026 07:48 PM

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி காணொலி காட்சி (Video Call) மூலமாக ஆஜராக அனுமதி கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார். இந்த உயர்மட்ட வழக்கின் விசாரணை இன்று தொடங்கவிருந்த நிலையில், இரு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர சங்கீதா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் மற்றும் மன உளைச்சல் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் நேரில் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.