அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சருக்கு எதிராக ஹேஸ்டேக்.... அதிமுக வேட்பாளரை சந்தித்த இளைஞர் பாசறை !
அமைச்சருக்கு எதிராக ஹேஸ்டேக்
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் மாங்குளம் மகேந்திரன் உத்தங்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக இளைஞர் பாசறை சார்பாக திமுக வேட்பாளர் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக #Get_out_moorthy என்ற வாசகத்தை முன்னெடுக்கும் வகையில் விளம்பர பலகையுடன் வேட்பாளர் மாங்குளம் மகேந்திரனை சந்தித்தனர். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...," புரட்சித் தமிழர் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் என அனைவரும் முடிவெடுத்து விட்டார்கள். இந்த முடிவின்படி இளைஞர் பாசறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து கெட் அவுட் மூர்த்தி என்ற வாசகத்தை ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அமைச்சர் மூர்த்தியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் என்று உறுதியாகிறது. எங்கு பார்த்தாலும் அம்மாவின் அலை வீசுகிறது. இந்த எழுச்சியின் மூலம்
தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர். இதன் காரணமாக தான் கெட் அவுட் மூர்த்தி என்ற வாசகத்துடன் தயாராகி உள்ளனர். இரு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து தொகுதிக்கு அமைச்சர் மூர்த்தி எதுவும் செய்யவில்லை.
அமைச்சர் மூர்த்தி குறித்து மக்கள் புகார் சொல்கின்றனரா?
சாலை வசதி, சாக்கடை வசதி, எந்த அடிப்படை வசதிகளும் அவர் செய்யவில்லை. கல்விச் சாலைகள் எதுவும் திறக்கவில்லை. ஆனால் ஒன்று செய்துள்ளார், கனிமவளக் கொள்ளையில் பணத்தை சம்பாரித்துள்ளார். பத்திர பதிவில் முறைகேடில் ஈடுபட்டு பணத்தை சம்பாரித்துள்ளார். இதனால் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர். இதனால் மாற்றத்தை விரும்புகின்றனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் கூடும் என நினைக்கின்றனர். படித்தவர், பண்பாளர் என்ற எண்ணத்தில் என்னை மக்கள் திலகமிட்டு கிழக்குத் தொகுதியில் வரவேற்கின்றனர்.
அமைச்சர் மூர்த்தி தினமும் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்க செய்கிறாரே!
அவர் பணத்தை கொடுத்து பல்வேறு பணிகளை செய்கிறார். மதுரையில் பத்து தொகுதியையும் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னார். ஆனால் தற்போது அவர் தொகுதியை விட்டுகூட வெளியேறாமல் பயத்தில் கிழக்குத் தொகுதியில் பணி செய்து வருகிறார். தினமும் பிரச்சாரம் என்று மக்களை அடைத்து வைக்கிறார். மனித சிறை வைத்துள்ளார். ஆனால் திமுக ஆதரவாளர்கள் கூட இரட்டை விரலை காண்பித்து வரவேற்பு கொடுக்கின்றனர். அமைச்சர் மூர்த்தி சார்பில் பணம் வெளிப்படையாக கொடுக்கப்படுகிறது. ஓட்டுக்கு ஆயிரம் கொடுக்கிறார். ஆனால் தேர்தல் பறக்கும் படை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மக்கள் பணத்த வாங்கிக்கொண்டு நியாயத்துக்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.