உங்கள் வாக்கு எந்த வாக்குச்சாவடியில் உள்ளது? எப்படி அறிந்து கொள்வது? முழு விவரங்கள்..!
WEBDUNIA TAMIL April 22, 2026 04:48 PM

தமிழகத்தில் நாளை அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக தெரிந்துகொள்ள இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தற்போது வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவுக்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் பணிபுரியும் மக்கள், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றச் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு திருத்தங்களுக்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வாக்குச் சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை இந்த சீட்டுகளை பெறாதவர்கள் அல்லது வெளியூர்களில் இருப்பவர்கள் தங்களின் வாக்குச்சாவடி முகவரியை அறிய, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://electoralsearch.eci.gov.in என்ற முகவரியைப் பயன்படுத்தலாம்.

மேலும், 'Voter Helpline' செயலி அல்லது 1950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொண்டும் விவரங்களைப் பெறலாம். அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.