இப்போதெல்லாம் முதல் திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமல்ல.. இரண்டாம் திருமணம் செய்து கொள்வோர்கள் கூட திருமணத்திற்கு பல நிபந்தனைகளை போடுகிறார்கள்.. முன்பெல்லாம் திருமண புரோக்கர் என்று தனியாக நபர்கள் இருந்தார்கள்.. இப்போதும் இருக்கிறார்கள்..
ஆனால் பெரும்பாலானோர் ஆன்லைனில் பல பிரபலமான இணையதளங்களில் தங்களுக்கான வரங்களை தேடுகிறார்கள். இப்பதெல்லாம் ஒரு சாதிவாரியாக இணையதளங்கள் வந்துவிட்டது. அதேபோல், விவகாரத்து பெற்றவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்கும் இப்போது பல இணையதளங்கள் வந்துவிட்டன.
இந்நிலையில் 37 வயதான விவாகரத்து பெற்ற ஒரு ஐடி துறையில் பணியாற்றும் ஒரு நபர் தனக்கு 30 வயதுக்குள், திருமணமாகாத, யாரையும் காதலித்திருக்காத, இந்தியாவில் குறிப்பிட்ட உயர் சாதியை சேர்ந்த வெர்ஜின் பெண் வேண்டும் என்று கேட்டது பேசு பொருளாக மாறியிருக்கிறது..
பிரபல மேட்ச் மேக்கர் ஓந்திரில்லா கபூர் இதை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட கிளைண்டே தனக்கு வேண்டாம் என கூறியுள்ள ஓந்திரில்லா ‘நீங்கள் கேட்கும்படியே ஒரு பெண் இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் எதற்காக விவாகரத்தான 37 வயது நபரை மணந்து கொள்ள வேண்டும்?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரின் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.