கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4.6 கோடி (4,63,44,590) வாக்குகள் (தபால் வாக்கினையும் சேர்த்து) பதிவாகின.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள் உள்ளனர். 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.6 கோடி (5,67,07389). இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.7 கோடி (2,77,38,925), பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.8 கோடி (2,89,60,838), மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7617.
இன்றைய தேர்தல் வாக்குப்பதிவின் படி, மதியம் 03 மணி நிலவரப்படி தமிழகத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 %, குறைந்தபட்சமாக 61.95 % கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குகள் வாக்குப்பதிவாகியுள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 0.86 கோடி வாக்குகள் பதிவாகின. ஆனால், இன்று அதே நேரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 1.01 கோடியாக உயர்ந்து, தொடக்கத்திலேயே பெரும் எழுச்சியுடன் தொடங்கியது.
அதன்படி, காலை 11 மணி அளவில் 2021-இல் 1.64 கோடி வாக்குகளே பதிவாகின. ஆனால், இந்த முறை அதே நேரத்தில் 2.15 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த தேர்தலில் மதியம் 01 மணியளவில் 2.50 கோடி வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த முறை மதியம் 01 மணிக்கே 3.26 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, 2021 தேர்தலில் மதியம் 03 மணிக்கு பதிவான அதே வாக்குகளை, இந்த முறை 02 மணிநேரத்திற்கு முன்பாகவே, மதியம் 01 மணிக்கே பதிவாகியுள்ளது.
பின்னர் மதியம் 03 மணி நிலவரப்படி, 2021-இல் 3.27 கோடி வாக்குகள் பதிவாகின. ஆனால், இந்த முறை 03 மணிக்கே 3.99 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது. இது, கடந்த தேர்தலில் மாலை 05 மணிக்கு பதிவான அதே எண்ணிக்கையிலான வாக்குகளை, இந்த முறை மதியம் 03 மணிக்கே பதிவாயுள்ளது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நநடைபெற்றுள்ளதால் தமிழகத்தில் இந்த முறை வரலாற்றில் முதல்முறையாக 05 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4.6 கோடி (4,63,44,590) வாக்குகள் (தபால் வாக்கினையும் சேர்த்து) பதிவாகிஇருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, 2021 தேர்தலை விட சுமார் 50 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த கூடுதல் வாக்குப் பதிவுகள் ஆளும் தரப்புக்கு மீண்டும் சாதமாக அமையுமா அல்லது எதிர் தரப்பினருக்கு சாதகமாக அமைய போகிறதா..? அதாவது, மாற்றத்தை நோக்கி தமிழக மக்கள் வாக்களித்துள்ளனரா...? அல்லது மீண்டும் இதே ஆட்சிதான் வேண்டும் என வாக்களித்துள்ளனரா என்பது மே -04-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.