"சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு"- விஜய்க்கு இளையராஜா ஆதரவு
Top Tamil News May 01, 2026 07:48 PM

அரசியலில் கால் பதித்து தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் தவெக தலைவர்  விஜய்க்கு இசையமைப்பாளர் இளையராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் 29 மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை கடந்த புதன்கிழமை மாலை முடிவுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ், சாணக்கியா, என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் டிவி-பி மார்க், மேட்ரிஸ், டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்களும் தனியார் நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துள்ளன. திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என அவை கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் தவெகவே வெற்றி பெறும் என நெட்டிசன்கள் ஆருடம் செய்துவருகின்றனர். 

நடிகர் விஜய் சிறுவயதில் நடித்த திரைப்படம் ‘இது எங்கள் நீதி’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் வரும் விஜயின் சிறுவயது தோற்றம், ரசிகர்களிடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல் வரிகள், இப்போது அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு பேசப்படுகின்றன.


இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் தளத்தில், புகைப்படத்துடன் இருக்கும் 'இது எங்கள் நீதி' படத்திலிருந்து "சின்ன தம்பி உன்னை நம்பி  இந்த நாடு காத்திருக்கு" என தொடங்கும் பாடலை வீடியோவுடன் பகிர்ந்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.