4000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப Cognizant முடிவு.. AI தொழில்நுட்பத்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ?
Webdunia Tamil May 01, 2026 08:48 PM


AI தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஐடி சேவைகளுக்கான தேவை சரிவு காரணமாக, Cognizant நிறுவனம் சுமார் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 1 சதவீதமாகும்.

Project Leap என்ற மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், செயல்திறனை மேம்படுத்தவும் செயல்பாடுகளை தானியங்கி மயமாக்கவும் இந்த அதிரடி முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

குறிப்பாக, மீண்டும் மீண்டும் செய்யப்படும் வழக்கமான பணிகள் மற்றும் நடுத்தர அளவிலான பதவிகளில் உள்ளவர்கள் இந்த பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். இருப்பினும், நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை லைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.

இது பாரம்பரிய வேலை முறையிலிருந்து AI சார்ந்த புதிய வேலை முறைக்கு நிறுவனம் மாறுவதை காட்டுகிறது. இந்த மறுசீரமைப்பு மூலம் 2026-ஆம் ஆண்டிற்குள் 200 முதல் 300 மில்லியன் டாலர் வரை சேமிக்க Cognizant இலக்கு நிர்ணயித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றம், ஊழியர்கள் AI மற்றும் டிஜிட்டல் திறன்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.