தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு ஆதரவாக முடிவுகள் வெளியாகும் என்று ஆவலுடன் உள்ளனர். இதற்காக, அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொண்டாட்டத்திற்காக பட்டாசுகளும் தயாராக வாங்கி வைத்துள்ளனர்.
சிவகாசியில் உள்ள பல்வேறு பட்டாசு விற்பனை நிலையங்களில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, பட்டாசு தயாரிப்பும் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் பட்டாசுகளை ஆர்டர் அளித்து வருகின்றனர்.
மேலும், வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்துவதற்கு பலரும் மாலை வாங்கிச் செல்வது வழக்கம். இதனால், மாலைகள் விற்பனையும் நாளை மறுநாள் சூடுபிடிக்கும். பூக்களும் வழக்கத்தைவிட அதிகளவு இறக்குமதி செய்ய பூ வியாபாரிகள் தயாராக உள்ளனர்.
இதுமட்டுமின்றி வெற்றியைக் கொண்டாட இனிப்புகளும் மிகப்பெரிய அளவில் வழங்கப்படும் என்பதால் இனிப்புகள் விற்பனையும் அதிகளவு இருக்கும். இதுதவிர, பொன்னாடைகள், பூங்கொத்துக்கள் விற்பனையும் அடுத்த சில தினங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்காகவும் அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்தி போஸ்டர் அடிப்பது வழக்கம் என்பதால், போஸ்டர்கள் அடிக்கும் அச்சு நிறுவனங்களிலும் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பாலான நிறுவனங்கள் திமுக-வே வெற்றி பெறும் என்று கணித்துள்ளனர். இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, தவெக தமிழ்நாட்டில் அதிகளவு இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாத சூழலில், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது.
TVK Vijay: 'பொது அறிவு இருக்காது’ - தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!