வண்டார்கொடி என் வண்ணக்கிளி என் உள்ளாரா உன்னால காயம் – சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரெட்ரோ ஒரு ஆண்டு நிறைவடைந்தது
TV9 Tamil News May 01, 2026 07:48 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 01-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு இந்த ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், விது, சஞ்சய், கருணாகரன், கஜராஜ், ஸ்வாசிகா, ரம்யா சுரேஷ், சபிதா ராய், அவினாஷ் ரகுதேவன், ராகேஷ் ரக்கு, குமார் நடராஜன், கார்த்திகேயன் சந்தானம், தமிழ், சுஜித் சங்கர், வேட்டை முத்துக்குமார், சிங்கம்புலி, சத்யா, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், விஜய் முத்து, பிரேம் குமார், சந்தீப் ராஜ், ராமச்சந்திரன் துரைராஜ், எம்.டி.ஆசிப், அருள், முருகவேல், முத்துப்பாண்டி, மனோஜ், யமுனா, நிதிஷ், திர்ஷிவ், சஞ்சய், சாய் தீனா, சீமான் அப்பாஸ், மோகன் தாஸ், அரங்கநாதன், அசோக்ராஜா, சூரஜ், மனோஜ், மெர்லின், சதுரியன், செல்வகுமார், ஜீவா பாண்டி, வினோத், அலவுதீன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ஒரு ஆண்டை நிறைவடைந்தது ரெட்ரோ படம்:

வளர்ப்பு தந்தையான ஜோஜூ ஜார்ஜிடம் இருந்து விலகி தனது காதலியை பார்ப்பதற்காக ஜெயிலில் இருந்து தேடி செல்கிறார். இவர்களின் ஃப்ளாஸ் பேக்கில் வளர்ப்பு தந்தையால் பல க்ரைம்களை செய்கிறார். இப்படி இருக்கும் சூழலில் தனது காதலியை தேடி சென்ற இடத்தில் தனது மொத்த குடும்பமும் அடிமையாக இருப்பதை தெரிந்து கொள்கிறார். அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதனை சூர்யாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… RJ Balaji: அதற்காக சூர்யாவின் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

#TheOne year of #Retro 🔥📈@Suriya_offl @karthiksubbaraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @Music_Santhosh @hegdepooja @stonebenchers #OneYearOfRetro #1YearOfRetro pic.twitter.com/ImQfOZ1rVf

— Ranjith Kumar S (@Ranjith_Offl_)

Also Read… KH x RK படத்தின் ஓடிடி விற்பனையில் பேரம் பேசும் நிறுவனங்கள் – வைரலாகும் தகவல்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.