வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்
வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் ரசித்துக் கேட்ட பல பாடல்கள் நினைவின் அடுக்குகளில் மறைந்து போயிருக்கும். ஆனால், விலை உயர்ந்த பொருட்கள் தராத மகிழ்ச்சியை இன்று காலை ஒரு நட்பு பகிர்ந்த அந்தப் பாடல் தந்தது.
சின்ன வயசுல ஒரு பாடலை நாம அதிகமா விரும்பி ரசிச்சுக் கேட்டிருப்போம் . ஆனா வாழ்க்கையோட வேகத்துல அந்தப் பாடல் நினைவில் இல்லாம மறந்தே போயிருக்கும்.
ஆனா ஏதோ ஒரு இடத்துல திரும்ப அந்தப் பாடலைக் கேக்கிற சந்தர்ப்பம் வரும். அப்ப வர்ற சந்தோஷம் இருக்கே அது வேற லெவல்
அடடா நாம ரசிச்சுக் கேட்ட அந்தப் பாடலை இப்படி மறந்துட்டோமேன்னு தோணும் .
விலை உயர்ந்த எந்தப் பொருளும் தர முடியாத மகிழ்ச்சியை...இன்று காலை அழகிய நட்பொன்று பகிர்ந்த பாடல் தந்தது.
ஏதேதோ ஞாபகங்கள்...சின்ன வயது சந்தோஷங்கள்...
பாடலை பகிர்ந்த நட்பு எதையும் சொல்லாம/ எதையும் கேட்காம ...சும்மாதான் அனுப்பினேன் என்று காற்றைப் போல்..'சும்மா சொல்லியது.
இள வயது எஸ்பிபியின் குரலில் நான் ரசித்த பாடல்கள் எத்தனையோ உண்டென்றாலும். இந்தப் பாடலுக்கு என்றும் தனி மரியாதை.
சரி ... பாடலுக்கு வருவோம்..
'அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்'...
1977 'அவர்கள் 'திரைப்படம்.
அழகான பாடல்... கவித்துவமான காட்சி... காட்சிக்கு தகுந்தவாறு பொருத்தமான வரிகள்.. உறுத்தாத மெல்லிசை.. தேனான பாலுவின் குரல்.
"கண்ணா என்றாள் முருகன் வந்தான் முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தமென்று கூறி பூஜை செய்வாள்?!"
3 கதாநாயகர்கள் கதாநாயகியைச் சுற்றி... அந்தப் பெண் மேல ஒவ்வொருத்தரும் வச்சிருக்கிற அபிமானம் வேறவேற மாதிரி... அந்த வெவ்வேறான கோணத்தைக் காட்டுவதற்கு மூன்று சரணங்கள்.. சரளமான சங்கதிகள்.
சுஜாதா உடல் நலம் இல்லாமல் படுத்திருப்பார் .கமல் குழந்தைக்கு சோறு ஊட்டுவார் கசாயம் வைப்பார்... ரவிக்குமார் ஜூஸ் பிழிவார் .
ரஜினிகாந்த் மாத்திரையை பிரித்து கொடுப்பார். தலைக்கு ஒத்தடம் கொடுப்பார்.
(ஒரு கட்டத்தில் வாயில் விரல் வைத்து நகங் கடிக்கும் ரஜினியை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும் அழகு கவிதையாய் தலைவர்.. அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்)
சுஜாதாவின் பரிதவிப்பு ... கமலின் தவிப்பு ...காதல் மற்றும் தேடலுக்கு இடையிலான போராட்டம்..
இப்படி ஒவ்வொருவரும் கதாநாயகியின் மேல் அபிமானத்தைக்கொட்ட அதை அழகான வரிகளால் கேட்ச் பிடித்திருப்பார் கவியரசர். கவியரசர் எழுதியதை.. மெல்லிசை மன்னர் டியூனாப் போட அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் எஸ்பிபி. இந்தப் பாடல் ஒரு சகாப்தம்.
'அவள் தற்போதைய கதையை தேர்ந்தெடுப்பாளா? கணவனை (ரஜினியை)
அல்லது பழைய கதைக்கு திரும்புவாரா காதலன்( ரவிக்குமார்).
அல்லது புதிரான அறியப்படாததை தேர்ந்தெடுப்பாளா (கமலஹாசன்)... இன்று அது என்னவாக இருக்கப் போகிறது?
அதைத்தான் கவியரசர்
' இன்று நீ எந்த பக்கம் என்று... வார்த்தைகளில் கேட்டிருப்பார்.
"அவள் எழுதும் கவிதைகளை விதிபுகுந்தே திருத்துதம்மா'.. கதையை உள்ளடக்கிய வரிகள்..
இயக்குனர் இமயம் ,மெல்லிசை மன்னர், கவியரசர், பாடும் நிலா பாலு. இப்படி நான்கு மேதைகளின் சங்கமம் இந்தப் பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
"வாழ்வின் எல்லைகள் சுருங்கி கொண்டு வருவதாக உணரும்போது யாராவது ஒருவர் எதிரில் வந்து
சிலவற்றைச் சொல்லி
சிலவற்றைப் பகிர்ந்து
முன்னை விடவும்
வாழ்வு எவ்வளவு அருமையானது
என்று உணர்த்திவிட்டு போய்விடுகிறார்கள்."
வண்ணதாசன்.
கண்ணதாசன் எழுதிய கவிதை ஏனோஇப்ப நினைவுக்கு வருகிறது.
ஒருத்தி இருப்பா..
.எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏன் எதுக்குன்னு காரணங்களால் வரையறுக்க முடியாத ஒரு உணர்வைத் தந்து நிழலாட்டம் நம்ம கூடவே ஒருத்தி இருப்பா ... அவ கண்ணுக்கு மட்டும் நம்ம எப்பவுமே அழகா தெரிவோம். மழை விட்டதும் வரும் வானவில் போல வாழ்க்கையை ரசிக்க வைப்பா... அப்படியான ஒருத்தி வாழ்க்கையில் கிடைத்தால் வாழ்க்கை என்றும் இனிப்பான ஜாங்கிரி தான்!
இந்தப் பாடலை இன்று காலை எனக்கு அனுப்பிய அழகிய நட்பு...
அப்படியான 'ஒருத்தி 'தான்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
My vikatan
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.