“ஹோட்டலில் சாப்பிட இனி யோசிக்கணும்!”.. ரூ.25 பரோட்டா இனி ரூ.60!… சிலிண்டர் விலையேற்றத்தால் கிடுகிடுவென உயரும் உணவு விலை.. அதிர்ச்சியில் சென்னை மக்கள்..!!!!
SeithiSolai Tamil May 02, 2026 01:48 AM

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, நகரின் பெரும்பாலான உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இதுவரை 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு பரோட்டாவின் விலை தற்போது 50 முதல் 60 ரூபாய் வரையிலும், பிரியாணி வகைகளின் விலை வழக்கத்தை விட 30 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

திடீரென ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றத்தால், தினசரி ஹோட்டல் உணவுகளையே நம்பியிருக்கும் பேச்சுலர்ஸ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வணிக சிலிண்டர் விலையேற்றம் சாமானிய மக்களின் வயிற்றிலேயே கை வைக்கும் விதமாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.