பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%
ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
சித்திரை ~ 19 (2.5.2026) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ {பராபவ நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாதம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 12.45 am வரை ப்ரதமை பின் த்விதீயை.
நாள் ~ {ஸ்திர வாஸரம்} சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ விசாகம் (முழுவதும்)
யோகம் ~ வ்யதீபாதம்
கரணம்~ பாலவம் / கௌலவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30.
நல்ல நேரம் ~ 7 to 8 am and 11 to 12 pm
சூரிய உதயம் ~ காலை 5.57
சந்திராஷ்டமம் ~ மீனம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்
ஸ்ராத்த திதி ~ பிரதமை.
இன்று
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔
பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔
மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..
இன்றைய (2-05-2026) ராசி பலன்கள்
மேஷம்பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தக செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
அஸ்வினி : வருத்தங்கள் நீங்கும்.
பரணி : முடிவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : செல்வாக்குகள் அதிகரிக்கும்.
நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அமைதி பிறக்கும்.
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாக சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
சிந்தனையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மை ஏற்படும்.
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.
செயல்பாடுகளில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வாக்குவன்மை மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நினைத்த பணிகளை முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : இலக்குகள் பிறக்கும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.
உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் செய்யும் சிறு மாற்றங்கள் மூலம் லாபங்கள் மேம்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மாற்றமான தீர்வுகள் கிடைக்கும். உலக அனுபவங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும். வெளியூர் பயணங்களில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசாகம் : லாபங்கள் மேம்படும்.
அனுஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
கேட்டை : அறிமுகங்கள் கிடைக்கும்.
சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ரசனைத் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தெளிவுகள் பிறக்கும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை தரும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : ஒற்றுமையும் அதிகரிக்கும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக மறையும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகளில் இருந்த தாமதம் விலகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
அவிட்டம் : வேறுபாடுகள் விலகும்.
சதயம் : தாமதம் விலகும்.
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். திடீர் பொறுப்புகளால் மனதளவில் சில சோர்வுகள் உண்டாகும். வழக்கமான செயல்களிலும் கவனத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் சில மந்தமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : சலசலப்புகள் மறையும்
உத்திரட்டாதி : குழப்பமான நாள்.
ரேவதி : மந்தமான நாள்.
thiruvalluvar
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
தினம் ஒரு திருமுறைமறை – 1. பதிகம் – 44 பாடல் – 10
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.
விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?
தினம் ஒரு பாசுரம்நாலாயிர திவ்யப் பிரபந்தம்
” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”
இன்றைய சிந்தனை!
முதல் படி
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
உழைப்பு = வெற்றி
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
தினசரி.காம்
இன்றைய சிந்தனைக்கு…பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!
உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil