ரசிகர்களை சந்திக்க வரும் ராம் சரணின் 'பெத்தி'; ஜூனில் ரிலீஸ்..!
Seithipunal Tamil May 02, 2026 03:48 AM

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பெத்தி'. இந்த படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இராணி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இந்தாண்டு மார்ச் 27-ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் நிறைவடையாததால் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தின் ஒரு சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் ராம்சரணுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நின்ற நிலையில், ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராம்சரணுக்கு உடல்நிலை சீராகி மீதமுள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டு சண்டைக்காட்சியை நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி படம் ஜூன் 04-ஆம் தேதி வெளியாக உள்ளது. RRR படத்துக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான 'Game Changer' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.