தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்த அதிரடியான கருத்துக் கணிப்பு முடிவுகளை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், தொகுதிக்கு 10 முன்னாள் காவல்துறை அதிகாரிகள் வீதம் பணியில் அமர்த்தப்பட்டு, சுமார் 2.34 லட்சம் மக்களிடம் இந்த மெகா சர்வே நடத்தப்பட்டுள்ளது. அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய இந்த விரிவான கருத்துக்கேட்பின் முடிவில், தவெக-வுக்கு ஒட்டுமொத்தமாக 41 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஒரு புதிய கட்சி ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு பெரிய வாக்கு வங்கியைப் பெறும் எனக் கணிப்பு வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விஜய்யின் “மாஸ்” செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
“>