ஒரே பந்துல மொத்தமும் காலி.. வைபவ் சூர்யவன்ஷியை போல்ட் ஆக்கிட்டு கைதட்டி வம்புக்கு இழுத்த ஜேமிசன்.. ராஜஸ்தான் அணியை ஒற்றை ஆளாக மீட்ட ரியான் பராக்.. மாஸ் வீடியோ..!!
SeithiSolai Tamil May 02, 2026 09:48 AM

ஐபிஎல் 2026 தொடரின் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தாலும், மூன்றாவது பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கைல் ஜேமிசன் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஜேமிசன் வீசிய துல்லியமான ‘புல்லட் யார்க்கர்’ பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேமிசன் ஆக்ரோஷமாக கைதட்டி கொண்டாடியது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த ராஜஸ்தான் அணியை கேப்டன் ரியான் பராக் அதிரடியாக மீட்டார்.

அவர் துருவ் ஜூரலுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். துருவ் ஜூரல் 40 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், ரியான் பராக் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

“>

சூர்யவன்ஷி மற்றும் ஜெய்ஸ்வால் ஏமாற்றினாலும், கேப்டன் பராக்கின் பொறுப்பான ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு ஒரு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.