“இந்த பந்தை வீசினால் அவுட் தான்.. வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை போட்டுடைத்த இயான் பிஷப்.. இனி கதி என்ன?
SeithiSolai Tamil May 02, 2026 09:48 AM

ஐபிஎல் 2026 தொடரில் தனது 15 வயதிலேயே அதிரடி காட்டி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் நம்பர்-1 பந்துவீச்சாளர்களின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரள வைத்த வைபவ், இந்த சீசனில் 9 போட்டிகளில் 400 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பந்தயத்தில் விராட் கோலியுடன் போட்டி போட்டு வருகிறார்.

இவரது அபாரமான பேட்டிங் திறமையைப் பார்த்து வியந்த ரசிகர்கள், இவரது பேட்டில் ஏதேனும் ஏஐ சிப் பொருத்தப்பட்டுள்ளதா என்று கிண்டலாகக் கேட்கும் அளவிற்கு இவரது ஆட்டம் அதிரடியாக உள்ளது. இதற்கு பதிலளித்த வைபவ், “என் பேட்டில் சிப் எதுவும் இல்லை, இது கடவுள் கொடுத்த திறமை” என்று எளிமையாகக் கூறியுள்ளார்.

அதேவேளையில், வைபவ்வின் பேட்டிங் ஸ்டைல் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் இயான் பிஷப் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். வைபவ்வின் பேட் சுழற்றும் விதம் பேஸ்பால் விளையாட்டைப் போல இருப்பதாகக் குறிப்பிட்ட பிஷப், அவருக்கு ‘பேக்-ஆஃப்-எ-லென்த்’ பந்துகள் பலவீனமாக அமையலாம் என்று கணித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் இந்த நுணுக்கத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்த வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள பிஷப், தற்போதைய ஃபார்மில் அவரைத் தடுப்பது எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் பாராட்டியுள்ளார். 15 வயதில் ஒரு இந்திய வீரர் ஐபிஎல் அரங்கில் ஜாம்பவான்களை மிரட்டி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.