சமீபகாலமாக யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற குறுகிய வடிவ வீடியோக்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தனது பயனர்களுக்காக புதிய கிளிப்ஸ் என்ற வசதியை ஏறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் டிக்டாக், யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற ஷார்ட் வீடியோ வடிவத்துக்கு நேரடி போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸின் கிளிப்ஸ் அம்சம்நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள கிளிப்ஸ் என்பது அதன் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் இருந்து எடுக்கப்பட்ட குறுகிய வெர்டிக்கல் வீடியோக்களை கொண்ட புதிய அம்சமாகும். இதன் மூலம் பயனர்கள் நெட்ஃபிளிக்ஸில் முழு படம் அல்லது சீரிஸ்களை பார்க்கும் முன் கிளிப்ஸ் வீடியோக்களை பார்த்து, பார்ப்பதா வேண்டாமா என முடிவெடுக்க முடியும். இது கிட்டத்தட்ட டிரெய்லர் மற்றும் டீசர் போன்று படம் அல்லது வெப் சீரிஸ் எப்படி இருக்கும் என்று நமக்கு சொல்லும்.
இதையும் படிக்க : ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? – பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களையும் வெப் சீரிஸ்களை பார்ப்பதற்கு முன் அதன் முக்கிய காட்சிகளை ஷார்ட் வீடியோவாக பார்க்க முடியும். இது போன்று தொடர்ச்சியாக ஷார்ட் வீடியோக்களை கிளிப்ஸ் என்ற அம்சத்தின் மூலம் பார்க்க முடியும். அதில் நமக்கு விருப்பமான படங்களை அல்ல சீரிஸ்களை தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல இந்த கிளிப்ஸ் வீடியோக்களையும் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
இந்த கிளிப்ஸ் வசதியை எப்படி பயன்படுத்துவது?உங்களிடம் ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸ் செயலி இருந்தால் அவற்றை அப்டேட் செய்வது மூலம் இந்த கிளிப்ஸ் வசதியை பெற முடியும். இதற்காக தனியாக வேறு செயலிகள் எதையும் டவுன்லோடு செய்ய தேவையில்லை. நெட்ஃபிளிக்ஸ் செயலியை திறந்து அதில் கீழே இருக்கும் மெனுவில் கிளிப்ஸ் என்ற ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும். அதனை கிளிக் செய்தால் வெர்டிக்கல் வீடியோக்கள் உங்கள் ஃபீடில் வரும். அதனை ஸ்வைப் செய்வதன் மூலம் முழு வீடியோக்களை பார்க்க முடியும்.
இந்த புதிய அம்சம் தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மாற்ற நாடுகளில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : உங்களுக்கு NDMA-ல் இருந்து எச்சரிக்கை வந்ததா?.. கவலைப்பட வேண்டாம்.. இதுதான் காரணம்!
இந்த புதிய feature முதலில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என Netflix தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றை பயனர்களை வீடியோக்களை உருவாக்க முடியும். ஆனால், நெட்ஃபிளிக்ஸின் கிளிப்ஸ் அம்சத்தில் அதில் இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்களில் இருந்து கிளிப்ஸ்களை பார்க்க முடியும்.