மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் கிரிஷ் ஏடி (Girish A.D). இவரின் இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் சரண்யா (Super Sharanya) மற்றும் பிரேமலு (Premalu) போன்ற ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில், வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவந்த திரைப்படம்தான் பெத்லஹேம் குடும்ப யூனிட் (Bethlehem Kudumba Unit). இதில் மலையாள பிரபல நாயகன் நிவின் பாலி (Nivin Pauly) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில், இதுவரை மமிதா 2 படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவதாக பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் தொடங்கிய நிலையில், இன்று 2026 மே 2ம் தேதியில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்த புகைப்படங்களை, நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நெல்சனின் முதல் படம் பாதியிலேயே நின்னுடுச்சு… ஆனா இப்போ – நெல்சன் குறித்து பெருமையாக பேசிய ஆர்.ஜே.பாலாஜி
That’s a wrap for Bethlehem Kudumba Unit. Cheers to the cast, crew and every beautiful soul behind the scenes ❣️#BKU In theatres this Onam 🌼🌸
Stay tuned for updates!#BethlehemKudumbaUnit #MamithaBaiju #GirishAD #BhavanaStudios pic.twitter.com/eM99f7vFeO
— Nivin Pauly (@NivinOfficial)
அந்த பதிவில் நிவின்பாலி, “பெத்லஹேம் குடும்ப யூனிட் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் திரைக்குப் பின்னால் பணியாற்றிய ஒவ்வொரு அருமையான ஆத்மாவுக்கும் வாழ்த்துகள்” என அதில் அவர் கூறியுள்ளார். மேலும் ஷூட்டிங் முடிவு குறித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: பட்டாச கொளுத்துங்கடா.. சூர்யாவின் கருப்பு படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
இந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவுடன், நடிகர்கள் சங்கீத் பிரதீப், ஷாம் மோகன், வினய், சுரேஷ் கண்ணா மற்றும் சரிந்தா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஃபகத் பாசிலின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துவருகிறார். இப்படமானது 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இதன் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.