திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா? ஜெயித்தால் அமைச்சர் ஆவாரா?
WEBDUNIA TAMIL May 04, 2026 06:48 PM

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. அதிமுக 66 இடங்களிலும், ஆளுங்கட்சியான திமுக 61 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வலுவான முன்னிலையில் உள்ளார். பெரம்பூர் தொகுதியில் 6-வது சுற்று முடிவில் 40,339 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சேகரை விட 16,574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியிலும் 12,173 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்ட விதிமுறைப்படி ஏதாவது ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

தற்போதைய தகவல்களின்படி, விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மீண்டும் நடைபெறும் இடைத்தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடக்கூடும் என்ற பரபரப்பு தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.