தமிழக அரசியல் களமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலை வகித்து வந்த அவர், ரவுண்டுக்கு ரவுண்டு எதிரணி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அசைக்க முடியாத பலத்தை நிரூபித்தார்.
திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில், ஒரு புதிய கட்சியின் தலைவராகக் களம் கண்டு இந்த வெற்றியைப் பதிவு செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது.
“மாற்றத்தை” எதிர்நோக்கிய தமிழக மக்கள், தளபதி விஜய்யின் மீது வைத்த நம்பிக்கையை இந்த இரட்டை வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த மாஸ் என்ட்ரி மற்றும் இமாலய வெற்றியால் தவெக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் திருவிழாக் கோலமாகப் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தை வானளாவிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.