'அடடா.. என்ன ஒரு சிரிப்பு முகத்துல'; பெரம்பூரில் அபார வெற்றி; வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட விஜய்..!
Seithipunal Tamil May 05, 2026 03:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும்... திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றுள்ளார். 

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறுவதற்காக விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து 06 மணியளவில் புறப்பட்டார். அப்போது தனது தாய் தந்தையிடம் ஆசிகள் வாங்குவதற்காக அடையாறில் உள்ள வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையமான லயோலா கல்லூரிக்கு வருகை தந்தார். 

அங்கு அவருக்கு தேர்தல் அலுவலர் பெரம்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட விஜய், சான்றிதழை தூக்கிப் பிடித்தபடி, சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விஜய் வீட்டிலும் புறப்பட்டு வந்தது முதல் அவரது காரை பின்தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்களும் வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.