பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் கலந்து இரவு சாப்பிட என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News May 05, 2026 08:48 AM

பொதுவாக கோடை காலத்தில் வெயில் வாட்டும் .இந்த வெயிலில் நிறைய பேருக்கு உஷ்ணம் அதிகமாகி பல்வேறு உடல் நல கோளாறுகள் உண்டாகும் .குறிப்பாக வயிற்று போக்கு முதல் காய்ச்சல் வரை வந்து பாடாய் படுத்தி எடுக்கும் .இந்த கோடை கால கோளாறுகள் வராமல் காக்க சில இயற்கை வைத்திய முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.உடல் உஷ்ணத்தை குறைக்க உலர் திராட்சை, ப்ரூன், அத்திப்பழம் ஆகிய மூன்றையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். 
2.காலையில் எழுந்தவுடன் இவற்றை சாப்பிட உடல் சூட்டை தணிக்கவும், குடல் இயக்கத்தை எளிதாகவும் உதவும். 
3.உடல் உஷ்ணத்தை குறைக்க வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்கலாம். 
4.இது மலச்சிக்கலை போக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  
5.உடல் சூட்டை குறைக்க சப்ஜா விதைகளை தண்ணீர் அல்லது குளிர்ந்த பாலில் ஊறவைத்து காலையில் குடிக்க உடல் சூடு குறையும் . 
6.கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பார்லி தண்ணீர் அல்லது பார்லி கஞ்சி குடிக்கலாம். 
7.இந்த பார்லி கஞ்சி  மலச்சிக்கலில் இருந்தும் விடுபட உதவும். 
8.இந்த பார்லி கஞ்சியுடன்  தயிரையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் தயிரை கடைந்து மோராகவும் குடிக்கலாம். 
9.உடல் உஷ்ணத்தை குறைக்க இளநீர் குடிக்கலாம் .இளநீரில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும். 
10.கோடையில் தர்பூசணி பழங்களை சாப்பிட்டால் உடல் சூட்டை குறைக்கலாம். இந்த பழம் மூலம் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளும் நீங்கும்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.