ப்ளீஸ்!., எனக்கு ஆதரவு கொடுங்க!. திருமாவளவனுக்கு விஜய் கடிதம்..
WEBDUNIA TAMIL May 06, 2026 03:48 PM


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. அதாவது விஜய் முதலமைச்சராகவிருக்கிறார். அதேநேரம் ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்எல்ஏகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில் விஜய்க்கு எந்த கட்சி ஆதரவு கொடுக்கும் என்பது தெரியவில்லை
.
தற்போது நிலவரப்படி சில நிபந்தனைகளுடன் காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கொடுக்கும் என தெரிகிறது. தற்போது இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என காங்கிரஸ் நிபந்தனை விதித்திருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் மீதமிருக்கும் தேமுதிக, விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவை மட்டுமே பெற வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது..

இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆட்சி அமைக்க தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். விஜயின் கோரிக்கையை திருமாவளவன் ஏற்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.