ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்று நெருங்கும் நேரத்தில் அந்த அணியின் ஃபீல்டிங் சொதப்பல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், இஷான் கிஷனுக்கு மட்டும் மூன்று வாய்ப்புகளை பஞ்சாப் வீரர்கள் வாரி வழங்கினர். லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் கூப்பர் கான்லி ஒரு கேட்சை விட, அடுத்த சில ஓவர்களிலேயே பெர்குசனும் ஒரு கேட்சைத் தவறவிட்டார்.
இது தவிர, யுஸ்வேந்திர சாஹல் பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங் ஒரு எளிதான ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டது சாஹலை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்த சீசனில் சாஹல் பந்துவீச்சில் மட்டும் இதுவரை 7 கேட்சுகளும், ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது அவரது துரதிர்ஷ்டத்தையே காட்டுகிறது. குறிப்பாக, அந்த அணியின் ஷஷாங்க் சிங் மட்டும் இதுவரை ஆறு கேட்சுகளைத் தவறவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
“>
ஒருபுறம் பேட்டிங்கில் அசத்தினாலும், ஃபீல்டிங்கில் கோட்டை விடுவது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இத்தனை ஆண்டுகள் காத்திருந்த பஞ்சாப் அணியின் கோப்பை கனவு இந்த முறையும் தகர்ந்துவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.