விஜய்க்கு கொடுக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு வாபஸ்?.. இதுதான் காரணமா?
Webdunia Tamil May 07, 2026 01:48 PM


ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டது. துவக்கம் முதலே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் முன்னிலையில் வகித்து வந்தது. இறுதியில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் ஆட்சி அமைக்க தேவையான 117 தொகுதிகள் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்எல்ஏக்களை பெரும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் தனது 5 எம்எல்ஏக்களுக்காக கொடுத்திருக்கும் நிலையில் மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு தேவை. எனவே விசிக,கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஒருபக்கம் கடந்த 2 நாட்களாக விஜய்க்கு கொடுக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 4ம் தேதி இரவு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடனேயே விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய உயர் ரக போலீஸ் பாதுகாப்பு (கான்வாய் வாகனங்கள்) கொடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே விஜய் எங்கு சென்றாலும் அவர்கள் பாதுகாப்புக்காக பின்னால் சென்றார்கள்.

ஆனால் நேற்று இரவு அந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. விஜய்க்கு போதுமான ஆதரவு எம் எல் ஏக்கள் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்காததால் இந்த பாதுகாப்பு சர்ச்சையை ஏற்படுத்தலாம் என விஜயே காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.