தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இல்லாமல் முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது 233 எம்எல்ஏக்களும் பொறுப்பேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்ற நிலையில் அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் தேர்தலுக்கு போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் தற்போது போட்டியின்றி அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தங்கள் பெரும்பான்மையின் நிரூபிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.