தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களால் மெகா ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். சிரஞ்சீவியின் மகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் ராம் சரண் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் தெலிங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகர் ராம் சரணை உலக அளவில் பிரபலமாக்கிய படம் ஆர்ஆர்ஆர். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உடன் இணைந்து நடித்து இருந்தார்.
இந்தப் படம் இவர்களை உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் ராம் சரண் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பெத்தி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒரு வாரத்தில் வெளியாகும் பெத்தி படத்தின் ட்ரெய்லர்:இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கி உள்ள இந்த பெத்தி படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. முன்னதாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டியது. சில காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 04-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெத்தி படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 18-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… தள்ளிப்போகிறதா விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்
பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:#PEDDI will stay in your hearts❤️
TRAILER From 18th May💥💥#PEDDI WORLDWIDE RELEASE IN CINEMAS ON JUNE 4th, with PREMIERES on JUNE 3rd pic.twitter.com/8wIgUTgGrz
— PEDDI (@PeddiMovieOffl)
Also Read… VD: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!