அச்சச்சோ கடைசி நேரத்தில் இப்படி ஆகிடுச்சே!.. திடீரென தள்ளிப்போன சூர்யா படம்.. எப்போன்னு பாருங்க!..
CineReporters Tamil May 11, 2026 10:48 PM

நடிகர் சூர்யா நடிப்பில் வரும் மே14ம் தேதி வெளியாக உள்ள கருப்பு திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடித்துவரும் புதிய திரைப்படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வித்தியாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் வரும் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், சூர்யா நடித்துள்ள மற்றொரு திரைப்படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதலில் ஜூலை மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது அந்த படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, படக்குழு இந்த திரைப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நீண்ட விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதிக வசூலை பெற தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களங்களில் உருவாகி வருவதால், சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.