சூர்யா கூட த்ரிஷா போகல!.. யோவ் மிலிட்ரி நீ எங்கேயே இங்கே!.. ரசிகர்கள் பதறும் அளவுக்கு சென்ற பிரபலம்!
CineReporters Tamil May 11, 2026 10:48 PM

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை ஹைதரபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக ஹைதரபாத் சென்றுள்ள சூர்யாவின் புகைப்படங்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஷேர் செய்துள்ளது. சூர்யாவுடன் சிறுத்தை சிவா கூடவே சென்றிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

கருப்பு படத்தை டைரக்டர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வில்லனாகவும் நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார்.படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், நேற்று வெளியான கருப்பு படத்தின் டிரெய்லரில், சூர்யா வழக்கறிஞராகவும் அதே நேரத்தில் நீதிக்காக போராடும் சக்திவாய்ந்த கருப்பு சாமியாகவும் தோன்றுகிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி நிறைந்த தருணங்கள் மற்றும் கிராமப்புற பின்னணி இணைந்த கதைக்களமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் கருப்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள JRC Convention சென்டரில் நடைபெறவுள்ளது. இதில் படக்குழுவினரும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை எந்த ஒரு ப்ரோமோஷனல் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாத த்ரிஷா இந்த நிகழ்ச்சிக்கவது வருவாரா என பலரும் கேள்வி ஏழுப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் சூர்யா ஹைதராபாத் சென்றுள்ளார். ஹைதராபாத் விமான நிலையத்தில் பூக்கொத்துடன் வரவேற்கப்பட்ட சூர்யாவின் புகைப்படங்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவரை காண ரசிகர்கள் விமான நிலையம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் திரண்டுள்ளனர்.

சூர்யாவுடன் கங்குவா பட இயக்குநர் சிறுத்தை சிவா கூடவே சென்றுள்ள நிலையில், மீண்டும் சூர்யா சிறுத்தை சிவாவுடன் படம் பண்ணப் போகிறாரா? அய்யய்யோ வேண்டாம்னா என ரசிகர்கள் கூறத் தொடங்கி விட்டனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.