IPL 2026: 'அவன் அப்படியே சாகட்டும்'.. தவறான வார்த்தையை பயன்படுத்தினாரா பத்ரிநாத்..? கிளம்பிய எதிர்ப்பு!
TV9 Tamil News May 11, 2026 11:48 PM

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 மே 10ம் தேதி ராய்ப்பூரில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. கடைசிப் பந்தில் ரசிக் தார் சலாம் 2 ரன்கள் ஓடி ஆர்சிபி அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இருப்பினும், பெங்களூருவின் வெற்றியின் உண்மையான நாயகன் க்ருணால் பாண்டியாதான்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 167 என்ற இலக்கை துரத்தும்போது பவர்பிளேக்குள் விராட் கோலி உள்பட 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது, களமிறங்கிய க்ருணால் பாண்ட்யா  46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் எடுத்து சென்றார். அந்த நேரத்தில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையின் போது, ​​முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத் தெரிவித்த ஒரு கருத்து, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனால், தமிழ் வர்ணனையில் இருந்து பத்ரிநாத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

ALSO READ: காயத்துடன் க்ருனால் செய்த சம்பவம்.. மும்பையை வீழ்த்திய பெங்களூரு..!

என்ன நடந்தது..?

S Badrinath said, “Krunal’s leg cramp, Rickleton didn’t say, ‘Krunal, you die because of cramp, but he came to stretch Krunal.”pic.twitter.com/LEjXpXqLmt

— CricketGully (@thecricketgully)


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக க்ருணால் பாண்டியா களத்தில் உறுதியாக நின்று ஒற்றை ஆளாக போராடி கொண்டிருந்தபோது, ​​அவருக்குத் தொடர்ந்து தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் விக்கெட் கீப்பர் ரியான் ரிகல்டன், பாண்ட்யாவுக்கு உதவ முன்வந்தார். பொதுவாக, ஒரு பேட்ஸ்மேனுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால் எதிரணி வீரர்கள்தான் அருகில் இருக்கும் காரணத்தினால் முதலில் உதவிக்கு முன்வருவார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், தனது தமிழ் வர்ணனையின் போது சுப்ரமணியன் பத்ரிநாத், ​​ரிக்கி ரிக்கல்டன் காயமடைந்த க்ருணால் பாண்ட்யாவை அப்படியே சாகட்டும் என்று விடமால், முதல் ஆளாக வந்து உதவி செய்தார் என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் சுப்ரமணியன் பத்ரிநாத்துக்கு எதிராக போர்க்கொடியை தூக்கினர்.

சுப்ரமணியன் பத்ரிநாத் விளக்கம்:

“Let him die there”… that’s not going to be my attitude. I will go and stretch him. Great gesture from Ryan Rickelton.. Fair Play points should be given to him and MI for that.

This is what I said on air, for people who don’t understand colloquial Tamil. 🙏

— S.Badrinath (@s_badrinath)


சமூக ஊடகங்களில் எழுந்த அமளிக்கு மத்தியில், சுப்ரமணியன் பத்ரிநாத் ஒரு விளக்கத்தை வெளியிட வேண்டியிருந்தது. அதில், பத்ரிநாத் கூறியதாவது, ”’அவன் அங்கேயே சாகட்டும்’ என்பது போன்ற மனப்பான்மை எனக்கு இல்லை. நான் அந்த இடத்தில் இருந்தாலும், அவரது உடல்நலம் சரியாகவே உதவி இருப்பேன். அந்த நேரத்தில், மும்பை விக்கெட் கீப்பர் ரியான் ரிகல்டன் உடனடியாக முதலுதவி அளித்து சிறப்பாகச் செயல்பட்டார். இதற்காக அவருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஃபேர் பிளே புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் புரியாதவர்களுக்காக, நான் உண்மையில் என்ன சொன்னேன் என்பதை விளக்குகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ: சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 போட்டிதான்.. பிளே ஆஃப்க்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?

ஐபிஎல்லில் சுப்ரமணியன் பத்ரிநாத்தின் செயல்திறன்:

சுப்ரமணியன் பத்ரிநாத் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடி 11 அரை சதங்கள் உட்பட 1,441 ரன்கள் எடுத்தார். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் சுப்ரமணியன் பத்ரிநாத் ஓய்வு பெற்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.