அமெரிக்காவின் புகழ்மிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமர்வில் பங்கேற்றுப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அனல் பறக்கப் பேசினார்.
குறிப்பாக, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் உடை மற்றும் செயல்பாடுகளை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
“மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வேஷ்டி அணிந்து கொண்டுதான் சென்னை வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆனால், கோட் மற்றும் சூட் அணிந்து கொண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், நாளை ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதே கோட்-சூட்டுடன் வெள்ளத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பாரா?” என அண்ணாமலை கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.
சினிமாவைத் தாண்டி அரசியலில் ஒரு தலைவருக்கான தோற்றமும், மக்களின் உணர்வுகளோடு இணைந்திருப்பதும் மிக முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தவெக மற்றும் பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.