“ஏடிஎம் மெஷின் எங்கே?”… இங்கே ஹேர் கட்டிங் தான் நடக்கும்!.. எஸ்பிஐ போர்டுடன் இயங்கும் வினோத சலூன்..!!!!
SeithiSolai Tamil May 12, 2026 12:48 AM

பீகார் மாநிலத்தில் மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தும் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களுக்குப் பணம் எடுக்கத்தான் செல்வோம்,

ஆனால் அங்கு ஒரு நபர் ஹேர் கட்டிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? பீகாரில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம் மையம் தற்போது சலூனாக மாறியுள்ளதுதான் இப்போது டாப் நியூஸ்.

அந்த இடத்தில் முன்பு இயங்கி வந்த ஏடிஎம் மையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடம் சலூன் கடை நடத்துவதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், சலூன் கடைக்காரர் கடையைத் தொடங்கினாலும், அங்குள்ள பழைய ‘SBI ATM’ என்ற பெயர்ப்பலகையை வங்கி நிர்வாகம் இன்னும் அகற்றவில்லை.

இதனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஏடிஎம் மையம் போலவே தெரிந்தாலும், உள்ளே சென்றால் கத்தரிக்கோலும் சீப்புமாக சலூன் கடைக்காரர் வரவேற்பது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

வங்கி நிர்வாகத்தின் இந்த அலட்சியம் ஒருபுறம் விமர்சிக்கப்பட்டாலும், இந்த “ஏடிஎம் சலூன்” அந்தப் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.