233 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்றனர்!
Top Tamil News May 12, 2026 12:48 AM

இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 233 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.

தனி பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கிடையில் இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 233 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். சான்றிதழ் உள்ளிட்ட பிரச்சனை காரணமாக 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பதில் சிக்கல் இருந்த நிலையில், இறுதியில் அனைவரும் அழைக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர். 233வது நபராக சி.வி.சண்முகம் சபாநாயகரிடம் உரிய சான்றிதழ்களை கொடுத்து MLA-ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதி மட்டும் காலியாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.