கொட்டும் முடிக்கு முற்றுப்புள்ளி...! கோடை வெயிலில் இருந்து கூந்தலை காக்க இந்த 7 விஷயங்களை செய்தாலே போதும்...!
Seithipunal Tamil May 12, 2026 01:48 AM

கோடை வெயில் தீவிரமடையும் நேரம் வந்தாலே வியர்வை, தலையில் பிசுபிசுப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் பலரையும் அவதிப்படுத்தத் தொடங்குகின்றன. பருவநிலை மாற்றம் சருமத்தை மட்டுமல்லாமல் தலைமுடியின் வேர்களையும் பாதித்து பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திர வெப்பம் கூந்தலின் இயல்பான ஆரோக்கியத்தை குன்றச் செய்து, முடி உதிர்வை அதிகரிக்கிறது.

கடும் வெப்பத்தால் தலையில் அதிக வியர்வை சுரக்கிறது. இதனுடன் சேரும் எண்ணெய் பிசுபிசுப்பு முடி வேர்களை தளரச் செய்கிறது. மேலும், வெயிலின் தாக்கம் தலைமுடியில் உள்ள இயற்கை ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்துகிறது. இதனால் முடி மென்மையை இழந்து வைக்கோல் போன்ற தோற்றத்துக்கு மாறிவிடுகிறது.

சூரிய வெப்பம் முடியில் இருக்கும் புரதச்சத்தையும் சேதப்படுத்துவதால், முடி எளிதில் உடையும் நிலை உருவாகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்த கடும் வெப்ப காலத்தில் கூந்தலை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள் பெரிதும் உதவுகின்றன.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பது மிகவும் அவசியம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தினமும் போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும்.

உடலின் நீர்ச்சத்து குறைவு முதலில் தலைமுடியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தினசரி நீர்ப்போதையை சரியாக பேணுவது அவசியமாகிறது.தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை பயன்படுத்தி வாரத்திற்கு ஒருமுறை மெதுவாக தலையில் தடவி மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் சீராகி முடி வேர்கள் வலுப்பெறும்.

இது முடி உதிர்வை குறைக்க உதவும்.வெளியே செல்லும் முன் தலைமுடிக்கு பாதுகாப்பான சீரம் தடவுவது வெயிலின் நேரடி தாக்கத்திலிருந்து கூந்தலை காக்கும் கவசமாக செயல்படுகிறது.அதேபோல், வெயிலில் செல்லும்போது குடை, தொப்பி அல்லது மென்மையான பருத்தித்துணியால் தலைமுடியை மூடி பாதுகாப்பது நல்ல பலனை தரும்.

இது சூரிய வெப்பம் நேரடியாக தலையைத் தாக்குவதை குறைக்கும்.வியர்வை மற்றும் தூசி காரணமாக தலையில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை மென்மையான தலைமுடி சுத்திகரிப்பான் பயன்படுத்தி தலைக்கழுவுவது அவசியம்.கோடை காலத்தில் ஏற்கனவே அதிக வெப்பம் நிலவுவதால், தலைமுடியை உலர்த்தும் கருவிகள் மற்றும் நேரடி சூடு தரும் அழகு சாதன கருவிகளை தவிர்ப்பது நல்லது.

அவை முடியின் வறட்சியை மேலும் அதிகரிக்கக்கூடும்.கீரை வகைகள், பாதாம், வால்நட், பழங்கள் மற்றும் சத்தான உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.