“எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!”… குறைந்த விலையில் ஒரிஜினல் போன் என மோசடி… ஃபேக்டரியில் அதிரடியில் போலீஸ்…!!!
SeithiSolai Tamil May 12, 2026 01:48 AM

டெல்லியில் பிரபல மொபைல் பிராண்டுகளான Oppo, OnePlus மற்றும் Realme ஆகியவற்றின் பெயரில் போலி போன்களைத் தயாரித்து வந்த ஒரு பெரிய கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கச்சிதமாகப் பிடித்துள்ளனர்.

கரோல் பாக் மற்றும் மோதி நகர் பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு குடோன்கள் மற்றும் ஒரு தொழிற்சாலையை போலீஸார் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

அங்கிருந்து ஏராளமான போலி மொபைல்கள், பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் போலி பிராண்டிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட 8 இயந்திரங்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக இரண்டு பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். குறைந்த விலையில் ஒரிஜினல் போன் என நம்பி ஏமாறும் மக்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.