“நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க!”- கண்ணீர் மல்க நின்ற அதிமுக எம்.எல்.ஏ.. கையை பிடித்து தைரியம் கொடுத்த முதல்வர் விஜய்! நெகிழ்ச்சியில் அதிமுக வட்டாரம்..!!
SeithiSolai Tamil May 12, 2026 10:48 PM

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு, தமிழக முதல்வர் விஜய் இன்று திடீர் வருகை தந்து அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார்.

சட்டப்பேரவை பதவியேற்பு விழாவின் போது, உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ-வின் செயலை கூர்ந்து கவனித்த முதல்வர், இன்று நேரில் சென்று அவரைச் சந்தித்ததுதான் ஹைலைட். அங்கே கூடியிருந்தவர்களின் கண்கள் விரிய, அந்த எம்.எல்.ஏ-வின் கரங்களைப் பற்றிக்கொண்ட முதல்வர் விஜய், “நான் இருக்கேன்.. உங்களைப் பார்த்துக்கிறேன், எதற்கும் கவலைப்படாதீங்க” என தோழனாகத் தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லியிருக்கிறார்.

ஒரு மாநிலத்தின் முதல்வர், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஒரு உறுப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தேடிச் சென்று ஆறுதல் கூறிய இந்தச் சம்பவம் “அரசியல் நாகரிகத்தின் உச்சம்” என சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram