சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு... TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி இதோ !
அருண் சின்னதுரை May 30, 2026 08:14 PM

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசுப்  பணியாளர்  தேர்வாணையத்தால்  நடத்தப்படவுள்ள TNPSC GROUP  I  முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 03.06.2026 முதல் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

 
TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்
 
 சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக, TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான, இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இத்தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில், ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது,  இப்பயிற்சி வகுப்புகளில் வாரந்தோறும் மாதிரி பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான  மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறிவழி  காட்டும் மையத்தில் 03.06.2026   முதல் நடத்தப்பட உள்ளது. மேலும்,  இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பாக நேரிலோ இவ்வலுவலக  04575-240435/ 9444925890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். https://t.me/svgemployment  என்ற Telegram குழுவிலும் இந்த இலவசப்பயிற்சி வகுப்பு தொடர்பான அட்டவணையை தெரிந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் https://forms.gle/vk2hH6jRYefR793b6என்ற Google form-ஐ பூர்த்தி செய்து முன்பதிவு செய்திடல் வேண்டும்.
 
புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்ட நுாலகத்தில் பராமரிக்கப்படும் இத்தேர்வுக்கான  புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர்கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அவ்வப்போது அரசால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலை பெற்று பயனடையலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.